வாழைப்பழம் கீர் ரெசிபி..!
ஒரு அற்புதமான டெலிசியஸ் வாழைப்பழம் கீர் ரெசிபி சாப்பிடுவதற்கு அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
பால் 2 கப்
மசித்த வாழைப்பழம் 1 கப்
ஏலக்காய்த்தூள் 1/2 ஸ்பூன்
குங்குமபூ சிறிது
இனிப்பு தேவையானது
உலர் பழங்கள் நறுக்கியது 1/2 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
பால் நன்றாக சுண்டியதும் அதில் ஏலக்காய்த்தூள், குங்குமபூ மற்றும் நறுக்கிய உலர் பழங்களை சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் மசித்த வாழைப்பழம் சேர்த்து அதில் காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக அதில் இனிப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக வட்டமாக நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை வைத்து அலங்கரிக்கலாம்.
அவ்வளவுதான் சுவையான வாழைப்பழம் கீர் தயார்.
இதனை ஸ்நாக்சாகவும் காலை மற்றும் இரவு உணவாகவும் சாப்பிடலாம்.
குழந்தைகள் இதுமாதிரி செய்து கொடுங்க, இட்லி தோசை சாப்பிடுபவர்களுக்கு கஷ்டமாக இருந்தால் குழந்தைகள் இதை முழுவதுமாக சாப்பிட்டு காலி செய்துவிடுவார்கள்.