ஆடி முதல் நாளில் அம்மனுக்கு கருவாட்டு குழம்பு…!
வஞ்சிரம் மீன் கருவாடு 200 கிராம்
கத்திரிக்காய் 6 நறுக்கியது
முருங்கைக்காய் 2
தண்ணீர் 2 கப்
நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
வெந்தயம் கால் ஸ்பூன்
பூண்டு 10 பற்கள்
கறிவேப்பிலை சிறிது
வெங்காயம் 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2 கீறியது
தக்காளி 3 நறுக்கியது
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்
புளிக்கரைசல் 1 கப்
உப்பு தேவையானது
முதலில் சூடான நீரில் கருவாடுகளை சிறிது நேரம் வைத்திருந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,வெந்தயம்,பூண்டு,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
பின் இதில் கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
அதற்கு பின் இதில் புளிக்கரைசல் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
கடைசியாக கருவாடு துண்டுகளை போட்டு வேகவைத்து இறக்கவும்.
அவ்வளவு தான் மணக்க மணக்க கருவாட்டு குழம்பு தயார்.