காரசாரமான சிக்கன் கறி…!
சிக்கன் ஊற வைக்க:
சிக்கன் 1 கிலோ
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையானவை
மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்
வெங்காயம் 4
பச்சை மிளகாய் 3
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
தக்காளி 4
உப்பு தேவையானது
தனியா தூள் 2 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
தண்ணீர் 2 கப்
கொத்தமல்லி இலை கைப்பிடி
சிக்கனை சுத்தம் செய்து ஊறவைக்க தேவையானவற்றை போட்டு கலந்து ஊற விடவும்.
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் உப்பு,தனியா தூள்,சீரகத்தூள் சேர்த்து வதக்கி ஊறவைத்த சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.
இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் காரசாரமான சிக்கன் கறி தயார்.