சுவையான கொத்து தோசை ரெசிபி..!
வீட்டில் வெறும் தோசையே செய்து அளுத்துப்போச்சா குழந்தைகள் சாப்பிடவே மாட்றாங்களா? கவலை வேண்டும் இப்போ நான் சொல்லும் தோசை செய்து கொடுங்க இன்னும் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
தேவையான பொருட்கள்:
- இரண்டு தோசை
- எண்ணெய்
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- அரை டீஸ்பூன் சீரகம்
- ஒரு பெரிய வெங்காயம்
- இரண்டு பச்சை மிளகாய்
- கருவேப்பிலை
- ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ஒரு தக்காளி
- உப்பு
- மஞ்சள் தூள்
- அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்
- கொத்தமல்லி இலை
- ஒரு டீஸ்பூன் கரம் மசாலா
- தோசையை முதலில் சிறிது சிறிது துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து பின் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் லேசாக கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் தண்ணீர் சுண்டியதும் அதில் வெட்டிவைத்துள்ள தோசை துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
- கடைசியாக கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கொத்து தோசை தயார்.
- இதனை சூடாக அப்படியே சாப்பிடலாம் சாப்பிட சுவையாக இருக்கும், உண்டு ரசித்துப் பாருங்கள்.