டுடே டின்னர் மசாலா பாஸ்தா..!
பென்னே பாஸ்தா 1 கப்
எண்ணெய் 2 ஸ்பூன்
வெங்காயம் 1 நறுக்கியது
பச்சை மிளகாய் 3 நறுக்கியது
தக்காளி 2 நறுக்கியது
பீன்ஸ் அரை கப் நறுக்கியது
பச்சை பட்டாணி அரை கப்
உப்பு தேவையானது
காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 1/2 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
சாட் மசாலா தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
தண்ணீர்
கொத்தமல்லி இலை நறுக்கியது
சீஸ்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பாஸ்தாவை அதில் போட்டு உப்பு சேர்த்து எண்ணெய் சிறிது ஊற்றி நன்றாக வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான ஃபேனில் எண்ணெய் ஊற்றி பூண்டு , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மிளகாய்,தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். மேலும் பீன்ஸ், பட்டாணி ,கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் உப்பு மற்றும் அனைத்து மசாலா வகைகளையும் சேர்த்து தண்ணீர் சிறிது கலந்து காய்கறிகளை வேக வைக்கவும்.
பின் வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக துருவிய சீஸ் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி கிளறிவிடவும்.
அவ்வளவுதான் சுவை மிகுந்த காரசாரமான மசாலா பாஸ்தா தயார்.
