தமிழ்நாடு அரசின் வரிவருவாய் பற்றாக்குறை 62 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
பணவீக்கம், உக்ரைனில் தொடரும் போர், உலகப் பொருளாதாரத்திலும் நிதிச் சந்தைகளிலும் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற பல சவால்களையும் வரும் நிதியாண்டில் நாம் எதிர்நோக்கியுள்ளோம். தேசிய அளவோடு ஒப்பிட்டு பார்க்கையில், நம் மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிகப் பொருளாதார வளர்ச்சியை எய்தியுள்ளதோடு, வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறையையும் ஒன்றிய அரசைவிடக் கணிசமாகக் குறைத்துள்ளோம். இது நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமைப்பண்பிற்கும் திறன்மிக்க நிதிமேலாண்மைக்கும் சான்றாகும்.
நலத் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகச் செலவுள்ள திட்டங்களைச் முன்னெப்போதுமில்லாத செயல்படுத்தி அளவில் பல வரும்போதிலும், கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, திமுக பதவியேற்கும் போது சுமார் 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு குறைத்துள்ளதாக தெரிவித்தார். இது, கோவிட் பெருந்தொற்றிற்கு முந்தைய 2019-20 ஆம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டாலும், ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டுமென்ற நிதிப் பொறுப்புடைமைச் சட்டத்தின் இலக்கை எட்டிட, அரசின் சமூக நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் எவ்வித பல
பாதிப்புமின்றி, வரும் ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை
படிப்படியாகக் குறைக்கப்படும் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.
இந்த நெருக்கடிக்கு அரசு முக்கியக் பதவியேற்றபோது காரணம், சந்தித்த அதற்கு நிதி முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வரி வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே ஆகும். 2006 முதல் 2011 வரையுள்ள ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சராசரி எட்டு சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020-21 ஆம் ஆண்டு 5.58 சதவீதமாகக் குறைந்தது.
மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மற்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் இந்த விகிதம் குறைவாகவே உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ள போதிலும், இதனை மேலும் உயர்த்தி நலத்திட்டங்களுக்கான வருவாய் முனைப்போடு செயல்படுவோம். ஆதாரங்களை ஈட்டிட
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருந்தொற்றின் இரண்டாவது அலையையும், கோவிட் சென்னைப் பெருவெள்ளத்தையும், கடுமையான நிதி நெருக்கடியையும் சிறப்பாகக் கையாண்டு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக்காட்டி, சாதனைகள் புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் அறிவிப்புகளை காண…