மாலத்தீவில் உள்ள மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகுபகுதியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த வாரம் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் 8 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். தரை தளத்திலிருந்து வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் இருந்து எதிர்பாராதா விதமாக ஏற்பட்ட நெருப்பால் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்களில் இந்தியர்கள் இருப்பதாக இந்தியா தூதரகம் தெரிவித்திருந்தது இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடலங்களை அடையாளம் காணப்பட்டு அதில் 3 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது.இந்நிலையில், உதவிக்காக தொலைப்பேசி எண்ணையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த காரைக்குடியை சேர்ந்த கணேசன் (50), கன்னியாகுமரியை சேர்ந்த ஜெனில் (45), திருவண்ணாமலையை சேர்ந்த தேன்மொழி (45) ஆகியோரின் உடல்கள் கண்டறியபட்டுள்ளது. தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாலத்தீவு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.