துப்பாக்கிச் சூடு:ஆணையத்தில் ஆஜராக விளக்கு கேட்கும் ரஜினி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்குக்கோரி நடிகர் ரஜினி மனுதாகக்ல் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 2018-ம் ஆண்டு மே 22-ம் நாள் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது அதனைத்தொடர்ந்து இதுவரை பல கட்ட விசாரணையை ஆணையம் நடத்தி முடித்துள்ளது

இதுவரை, 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சியங்களாக விசாரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்தவர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ரஜினி நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு. மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் போலீஸ்தான் என்று கூறியிருந்ததார் மேலும் போராட்டத்தில் பங்குகொண்டு போலீஸாரையே தாக்கிய சமூக விரோதிகளை உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றும்  ஒருநபர் விசாரணை ஆணையத்தில் நம்பிக்கையில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒரு நபர் ஆணையத்தின் முன்பாக வரும் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வரும் இடத்தில் ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி ,தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் அளிப்பதற்கு தயாராக இருப்பதாக கோரிக்கை விடுத்து நடிகரக் ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்துள்ளார் .

What do you think?

ரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..!

‘பிகில்’ பாண்டியம்மாவின் வைரல் போட்டோஸ்