ADVERTISEMENT
மாம்பழத்தில் பாயாசமா..?
தேவையான பொருட்கள் :
பால் – 2 1/2 கப்
பழுத்த மாம்பழம் – ஒரு கப்
சர்க்கரை – 1/4 கப்
பிஸ்தா – 5
பாதாம் – 4
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ – சிறிது
செய்முறை:
-
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடானதும் அதில் சிறிது குங்குமபூ மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
-
நன்றாக கனிந்த மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸியில் போட்டு சிறிது பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
முன்பு காயவைத்துள்ள பாலில் மாம்பழக்கூழை சேர்த்து, ஏலக்காய் பொடி சிறிது, வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து கிளரினால், ரிச்சான மாம்பழ பாயாசம் தயார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.