உடல் எடை குறைக்க இதை சாப்பிடுங்க… அப்பறம் பாருங்க வேறலெவல் ஆகிடுவிங்க…!
கொள்ளு உடலுக்கு அதிக வலிமையைத் தரக்கூடியது. அப்படிப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கும் கொள்ளு நாம் அடிக்கடி உண்ணுவதினால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கறைந்து உடல் எடை குறையும்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கொள்ளு கொடுத்து பழக்கிவிட்டால் போதும் அவர்கள் உடம்புக்கு இது மிகவும் வலிமை கொடுக்கும். அப்படிப்பட்ட உடலுக்கு நன்மை தரும் கொள்ளு குருமா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
-
கொள்ளு – 1 கப்
-
வெங்காயம் – 2
-
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்தது)
-
உப்பு – தேவையான அளவு
-
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
-
முதலில் கொள்ளுவை நைட்டே ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து ஒரு 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
வெங்காயம் – 1, தக்காளி – 3, வரமிளகாய் – 6, மல்லி – 1 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், இஞ்சி – 1 நீளத்துண்டு, பூண்டு – 7 பல்லு, தேங்காய் – 1/2 மூடி (துருவியது), மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், கசகசா – 2 டீஸ்பூன் ஆகியவை அனைத்தையுமே விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
வேகவைத்த உருளைகிழங்கை நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
-
ஊறவைத்த கொள்ளுவை ஒரு குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொண்டு தண்ணீரை வடிக்கட்டி கொள்ள வேண்டும்.
-
அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
-
அடுத்ததாக அரைத்து வைத்துள்ள மசாலாவை வெங்காயத்துடன் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
-
பிறகு அத்தனுடன் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, வேகவைத்த கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.