ஆகஸ்ட் 14 முதல் 20 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைறுக்கு ஓபன் போட்டி நடைபெற உள்ளது. தொடருக்காக தமிழ்நாடு அரசு 2.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன் மற்றும் இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன் முறையாக சர்வதேச சர்ஃப் ஓப்பன் போட்டியை நடத்துகின்றது. இப் போட்டி மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
“சர்வதேச சர்ஃப் ஓப்பன்- தமிழ்நாடு” போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் இந்திய சர்ஃபிங் சங்க தலைவர் அருன் வாசு, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் முதன் முறையாக சர்வதேச சர்ஃபிங் போட்டி நடைபெறஉள்ளது. மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 முதல் 20ஆம் தேதி வரை சர்வதேச அலைச்சலுக்கு ஓபன் போட்டி நடைபெறுகின்றது.
இந்த சர்வதேச சர்ஃப் ஓபன்- தமிழ்நாடு போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு 2.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் சர்வதேசலை சேர்க்கப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளோம். சிறப்பான முறையில் நடத்துவோம்.
ராமநாதபுரத்தில் அமையஉள்ள நீர் விளையாட்டு அரங்கில் சர்ஃபிங் விளையாட்டுக்கான பயிற்சி வழங்கப்படும் என்றார். ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கும் இப்போோட்டியில் 80 லிருந்து 100 வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.