முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி..!! அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம்…!!
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் இன்று பதவியேற்றார்.
இதுவரையில் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹுவிற்கு பதிலாக புதிய அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ்.., அவர்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமை இவரையே சேரும்..
தமிழகத்தில் இதுவரையில் ஆண்கள் மட்டுமே தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த நிலையில் முதன் முறையாக பெண் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் இன்று தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றார்.,
தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆலபோவது யார்..? 2026ம் ஆண்டு முதலமைச்சர் என்ற அரசைனையில் அமரப்போவது யார் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் இப்போதில் இருந்தே மக்கள் மனதிலும் அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என சொல்லலாம்..
இந்நிலையில் வருகின்ற 2026ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் அதிகாரியாகவும் முதல் பெண் தேர்தல் அதிகாரியாகவும் அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாட்டில் நடத்தவுள்ளார்.
தற்போது தமிழ்நாடு சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளராக பணியாற்றி வந்த அர்ச்சனா பட்நாயக் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..