ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான அஞ்சு டிப்ஸ்..!!
ஆரோக்கியமாக வாழ் நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில உணவு குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
ராகி : குறைந்தது வாரத்திற்கு மூன்று முறையாவது ராகி எடுத்துக்கொள்ள வேண்டும். ராகியில் அதிக புரதம் இருப்பதால் உடலுக்கு அதிக வலிமை கொடுக்கிறது.
வாழைப்பூ : வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை நீக்க உதவுகிறது.
அத்திக்காய் : அத்திக்காய் பொரியல் செய்து அதனுடன் தேங்காய் சேர்த்து, உணவு சமைத்து சாப்பிட்டால் குடல் புண்கள் ஆறும்.
புளிச்சக்காய் : புளிச்சக்காய் பழத்தை பிசைந்து அதனுடன் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து.., கசாயமாக குடித்தால் காய்ச்சல் நீங்கும்.
புளியம் பழம் : புளியம் பழத்தில் பேரிச்சைக்கு இணையாக குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ் அதிகம் இருப்பதால் மலசிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதுவுகிறது.
இதில் அதிக அமிலச்சத்து இருப்பதால்.., உடல் வீக்கம், உடல் வலி போன்றவற்றை சரி செய்யவும் உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி