ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அசத்தலான அஞ்சு டிப்ஸ் – 13
கடந்த சில நாட்களாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான சில குறிப்புகள் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அதில் இன்று நாம் பார்க்க இருப்பது.
கோவைப்பழம் : சர்க்கரை நோய் வாரத்திற்கு ஒரு முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனால் ரத்த சர்க்கரையின் அளவு குறைக்கப்பட்டு. சர்க்கரை நோயை குறைக்க உதவுகிறது.
தேன் பழம் : தேன் பழத்தில் வைட்டமின் பி, மற்றும் வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
இதனால் ரத்த அழுத்தம், மாரடைப்பு, வயிற்றுபுண், சர்க்கரை நோய் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
கொடுக்காப்புளி : இதை கொரி கொலிக்காய் என்றும் சொல்லுவார்கள், வாரத்திற்கு மூன்று முறைக்கு மேலாவது இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனால் நீர்க்கடுப்பு, ஆஸ்துமா, சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சொடக்கு தக்காளி : சொடக்கு தக்காளி பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
மஞ்சணத்தி பழம் : மஞ்சணத்தி பழத்தை சாப்பிட்டு வந்தால், வயிற்று போக்கு, கல்லீரல், மண்ணீரல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.