ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான அஞ்சு டிப்ஸ்..!!
நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
சிலருக்கு இந்த பானங்களை குடித்தால் மட்டுமே அந்த நாள் இனிமையாக தொடங்கும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நாம் காலை எழுந்தவுடன் நம் செரிமான சக்தியை கஷ்டப்படுத்துகிறோம் தான் சொல்லவேண்டும். இவ்வாறு செய்வது ஜீரண சக்தியை மோசமாகி வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் டி, காபியை தவிர்த்துவிட்டு வயிறுக்கு நன்மை பயக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் பானங்களை குடிப்பது தான் நல்லது.
எந்தெந்த பானங்கள் சாப்பிடலாம் மற்றும் அதன் பயன் என்ன என்பதை சிறு தொகுப்பு பார்க்கலாம் வாங்க
இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கற்றாழை ஜூஸ் சரும ஆரோக்கியத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். இது செரிமான சக்தியையும் அதிகப்படுத்துகிறது. நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தை காணலாம்.
நம்மில் பெரும்பாலானோர் இந்த ஆப்பிள் சைடர் வினிகரை சுவைத்திருக்க வாய்ப்பில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும் இந்த ஆப்பிள் சைடர் வினிகர், செரிமானத்துக்கு மிகவும் நல்லது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அது செரிமானத்தை மேம்படுத்தும்.
காலை எழுந்தவுடன் பால் கலந்த டீயை குடிப்பதை தவிர்த்து மிதமான சூடு தண்ணீரில் இஞ்சி கலந்து குடித்தால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கொடுக்கும். இல்லையெனில் இஞ்சி மற்றும் டீ கலந்து இஞ்சி டீயாகவும் குடிக்கலாம். இஞ்சியில் உள்ள நன்மைகள் நம் செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.
நாம் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகளை தரும் . இது உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், வாயு பிரச்னை தீரும் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. எனவே காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை ஜூஸ் கலந்து குடித்து வந்தால் செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..