அரசு பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்டு ஐந்து மாணவிகள் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இன்று தர்மபுரி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் சாந்தி அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள் உடல் நலம் விசாரித்தார்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே A.பள்ளிப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 94 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று மதியம் உணவு இடைவேளை போது ஆறாம் வகுப்பு மாணவிகள் சிலர் தங்களது வகுப்பில் ஆசிரியர் மேஜை மீதிருந்த சத்து மாத்திரையை எடுத்து சாப்பிட்டனர்.
சத்து மாத்திரை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மாணவிகள் தேகா, ஷர்மிளா, ஷாலினி, சபிநயா, அஷிதா ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்து ஆசிரியர்கள் மாணவிகளை அழைத்து ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. சிகிச்சைப் அளிக்கப்பட்டது. பிறகு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு.மாணவிகள் நன்றாக உள்ளன.
இத்தகவல் அறிந்து இன்று தர்மபுரி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் சாந்தி அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து மாணவிகளுடைய உடல்நிலை பற்றி விசாரித்தார்.
இணை இயக்குனர் சாந்தியிடம் கேட்டபோது மாணவிகள் நன்றாக உள்ளன. மேலும் பள்ளியில் மாணவி மாணவர்களுக்கு சுகாதாரத்தை பற்றியும் சத்துணவு மாத்திரைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.