ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அஞ்சு டிப்ஸ் – குறிப்பு 20
ஆரோக்கியமாக வாழ நாம் எடுத்துக்கொள்ளும் உணவில்.., நமக்கே தெரியாமல் சில ஆபத்துகள் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது நம் உடல் தான், நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சிலவற்றை சேர்த்துக்கொண்டால்.., உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
நெல்லிக்காய் : தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
அத்திப்பழம் : தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.
சுண்டக்காய் : வாரத்திற்கு இருமுறையாவது சுண்டக்காய் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை வெளியேற்றி ரத்ததை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வாழைக்காய் : வாரத்திற்கு மூன்றுமுறை வாழைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவையும் கட்டுக்குள் வைக்கும்.
கருப்பட்டி வெல்லம் : காபியில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வெல்லம் சேர்த்துக்கொண்டால். நோய் எதிர்புச்சக்தியை அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..