நோயற்ற வாழ்க்கைக்கு தேவையான – அஞ்சு டிப்ஸ்..!
கடந்த சில நாட்களாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அசத்தலான டிப்ஸ் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம்.., அதில் இன்று நாம் பார்க்க இருப்பது.
உலர் திராட்சை : காய்ந்த திராட்சையை இரவு தண்ணீரில் ஊற வைத்து.. மறுநாள் காலை வெறும் வயிற்றில் 5 முதல் 10 திராட்சை சாப்பிட்டு வந்தால்.., லோவ் பிபி ( low BB ) சரியாகி விடும்.
இஞ்சி : இஞ்சியின் சாறை எடுத்து அதில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால்.., சளி மற்றும் இருமல் நீங்கும்.
பாதாம்: நெஞ்சு எரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் நான்கு பாதாமை மென்று விழுங்கினால் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும்.
துளசி : அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மதிய உணவிற்கு பிறகு இரண்டு துளசியை மென்று விழுங்கினால் அல்சர் குணமாகும்.
ரோஜா குல்கந் : தினமும் காலை ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந் சாப்பிட்டு வந்தால்.., ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதலில் இருந்தும் விடுபடவும் உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.