‘கொரோனாவால் விமானங்கள் நிறுத்தம்’ உம்ரா பயணம் சென்ற தமிழர்கள் சவுதியில் தவிப்பு!

உம்ரா சென்ற தமிழக பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் சவுதி அரேபியா விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

புனித உம்ரா பயணத்திற்காக சவுதி அரேபியா சென்றுள்ள தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா திரும்ப முடியாமல் பரிதவித்து
வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது, இவர் தனது மனைவி, மகன்கள், சகோதரி உள்ளிட்ட 10 பேரும், கேரளாவைச் சேர்ந்த 30 நபர்களும் ஒரே குழுவாக சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் சென்றிருந்தனர்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சென்ற அவர்கள், 15 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு, 10 ஆம் தேதி அங்கிருந்து இந்தியா திரும்ப தயாராக இருந்தனர்.

ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அனைவரும், மதினா நகரிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் அவர்கள் இந்தியாவிற்கு திரும்ப எப்போது விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்ற தகவல்களும் இதுவரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்களது உறவினர்களும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

What do you think?

‘தில்லி படுகொலைக்குக் காரணமான சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள்’ வைகோ கோரிக்கை!

‘தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,096 குறைவு’