நாத்தனார் மகனுடன் உல்லாசம்…. ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்….!
கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டு கொல்ல கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி 40 வயதாகும் இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு சத்யா(36) என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
பழனியின் வீட்டில் அவரது அக்கா மகனான மாரியப்பன்(25) தங்கி பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் அவருக்கும் சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ள நிலையில் இருவரும் அடிக்கடி தனிமை கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த விவகாரம் நாளடைவில் பழனிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சத்யாவை கண்டித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் கண்டுக்காமல் இருந்த சத்யா மாரியப்பனிடம் பழகி கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பழனி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அவரது மகன்களும் வெளியே சென்றதால் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாரியப்பன் மற்றும் சத்யா இருவரும் கட்டிலில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அந்த நேரம் வேலைக்கு சென்ற கணவர் திடிரென வீட்டிற்க்கு வந்துள்ளார். வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
பின்னர் ஆத்திரம் தாங்க முடியாத பழனி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி சத்யாவை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
மேலும் அக்கா மகனான மாரியப்பனின் கழுத்தையும் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரியப்பனை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பழனியை தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்