பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட மாண்பாளம்..!! மக்கள் வைத்த கோரிக்கை..
பாலாற்றில் வெள்ளப்பெருக்கினால் மண்பாளம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி.
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த திருமணி பகுதியில் உள்ள பாலாற்றின் நடுவே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக பலத்தை பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இந்த தற்காலிக பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் அதிக வெல்லம் பாலாற்றில் வந்தால் இந்த பாலம் அடித்துச் செல்வது வழக்கம் கடந்த முறை பெய்த கனமழையில் இந்த பாலம் ஏற்கனவே அடித்துச் செல்லப்பட்டன.
மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் ராட்சச குழாய்களை புதைத்து தற்காலிக மண் பாலத்தை அமைத்து தந்தனர். பொதுமக்களும் தொடர்ந்து இந்த பாலத்தின் வழியாக பயணித்து வந்தனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பாலாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இந்த வெள்ளப்பெருக்கினால் இந்த தற்காலிக மண்பாளம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளன இதனால் சுமார் 12 கிலோமீட்டர் சுற்றி வேலூருக்கு செல்லும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு தரமான ஒரு தற்காலிக பாலத்தை அமைத்த தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..