அழகான கூந்தலுக்கு – அசத்தலான டிப்ஸ்..!!
அழகான முகம் மட்டுமல்ல அழகான கூந்தல் என்றாலும் அனைவருக்கும் பிடிக்கும்.., ஆனால் அதை சரியாக பராமரிக்காமல் விட்டால் கூந்தல் உதிர்வு, பேன், பொடுகு போன்ற தொல்லைகள் வரும்.
ஆனால் அவற்றை சரி செய்வது மிக சுலபம்.., அதற்கான சில டிப்ஸ்..
வெந்தயம் : உடல் சூடு நீங்க, வெந்தயத்தை ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து. தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து, குளித்தால் உடல் சூடு குறைந்து விடும்.
ஆவாரம் பூ : ஆவாரம் பூ, வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் சம அளவில் ஒன்றாக கலந்து, எடுத்துக்கொள்ள வேண்டும்.
தயார் செய்த ஜெல்லை தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் வெது வெதுப்பான நீரில் ஷாம்பு கொண்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை இதை செய்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
செம்பருத்தி : ஆவாரம் பூ, செம்பருத்தி ஒன்றாக சேர்த்து அரைத்து தேங்காய் பாலில் கலந்து, வாரத்திற்கு இருமுறை தேய்த்து குளித்தால், கூந்தல் உதிர்வு நின்று விடும்.
கற்றாழை : கற்றாழை ஜெல்லில் தேங்காய் எண்ணெய் கலந்து 30 நிமிடம் தலையில் ஊற வைத்து, வெது வெதுப்பான நீரில் அலசினால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
வேப்பிலை : வெந்நீரில் வேப்ப இலையை போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை கொண்டு தலைக்கு அலசி குளித்தால் சொறி, சிரங்கு நீங்கும்.
மேற்கண்ட இயற்க்கை செய்முறை செய்ய உபயோகிக்காதவர்கள், அதற்குரிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக்கொள்ளலாம்.
மேலும் இது போன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி