ஆரோக்கியமான வாழ்க்கைக்கு – இஞ்சி லேகியம்
இஞ்சியின் மருத்துவகுணம் நிறைந்த ஒரு உணவு பொருள் என்றாலும். அதில் இருந்து செய்யப்படும் லேகியம் எந்த அளவிற்கு உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
செய்ய தேவையான பொருட்கள் : இஞ்சி 100 கிராம், பூண்டு 6, தனியா 2 ஸ்பூன், நெய் 3 ஸ்பூன் மற்றும் உலர் திராட்சை ஒரு கப், வெல்லம் 1/4 கப்.
செய்முறை : இஞ்சி மற்றும் பூண்டின் தோல் உரித்து, இஞ்சி பூண்டு, தனியா ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும், பின் அதில் உலர் திராட்சை மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் அரைத்த இஞ்சி பேஸ்டை சேர்க்கவும்.
பின் நெய் பிரிந்து வரும் பொழுது அதை இறக்கி சூடு ஆற்றவும். சூடு ஆறிய பின் ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
பயன்கள் : இதை தினமும் காலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால். ஜலதோஷம், வயிற்று உப்பிசம், மற்றும் இரைப்பை வீக்கம் போன்ற பிரச்சனைகள் வராது.
இஞ்சி சாறு மற்றும் தேன் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த லேகியத்தை சாப்பிட வேண்டாம்.’
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ. லோகேஸ்வரி