இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆலினால் அழகு ராஜா வேணுமோ…? வைரலாகும் புது மோமோஸ்..!!
மோமோஸ் என்ற பெயரில் டெல்லியில் ஃப்ரூட் மோமோஸ் விற்பனை செய்யப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவை டெல்லியில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது என்றும் அந்த மோமோஸை விற்பனை செய்யும் நபர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆவிகளில் வைத்து சாப்பிடும் உணவுகள் உடலுக்கு நன்மையை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏன்? என்ன காரணம்? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இவை எளிதில் ஜீரணம் ஆகும். இதனால் தான் சிறிய குழந்தைகள் முதல் பல்லு போன தாத்தா, பாட்டி வரை இந்த உணவுகளையே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு உதாரணமாக இட்லி, கொழுக்கட்டை, வேக வைத்த காய்கறிகள், இடியாப்பம், ஆப்பம் போன்றவைகளை சொல்லலாம்.
இதில் சிறிது கூட எண்ணெய் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படுகிறது. இவை உடலுக்கு உபாதைகளை கொடுக்காது எனவும் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. அது போல் மோமோஸ் என்ற ஒரு உணவு இருக்கிறது.
இது கிட்டத்தட்ட கொழுக்கட்டை போன்றது. ஆனால் இதில் காய்கறிகள், இறைச்சிகள் உள்ளிட்டவைகள் சேர்க்கப்படும். இதையும் ஆவியில் தான் வேக வைப்பார்கள். ஆனால் என்ன ஒரு பிரச்சினை இது மைதாவில் தயாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் விற்கப்படும் மோமோஸ் வித்தியாசமானது என்று ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது பழத்தில் தயாரிக்கப்படுவதாகவும், இதன் விலை ரூ 170 ஆக உள்ளது. இந்த சர்ச்சைக்குரிய ஃப்ரூட் மோமோஸை தயாரிக்கும் ஒரு தெருவோர வியாபாரியின் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
4 பழங்கள் கொண்ட இந்தியாவின் வித்தியாசமான ப்ரூட் மோமோஸ் என்ற கேப்ஷனுடன் இந்த மோமோஸ் தயாரிக்கப்படுகிறது. பால், சீஸ், கிரீம், பழங்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. அத்துடன் உப்பு, மிளகு, மூலிகைகள் உள்ளிட்டவையும் சேர்க்கப்படுகிறது.
அந்த வீடியோவில் அவர் எப்படி மோமோஸ் தயாரிக்கிறார் என்ற காட்சியும் அடங்கியுள்ளது. அவர் வறுத்த பன்னீர் மோமோஸை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் காட்சிகளும் வைரலாகி வருகிறது. இந்த உணவை எங்கும் நீங்கள் காண முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோமோஸ் தயாரிப்புக்கு பல்வேறு விர்சனங்கள் எழுந்துள்ளன.
அதில் ஒரு நெட்டிசன், நகைச்சுவையாக ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ள பதிவு அதாவது சகோதரரே எல்லாவற்றையும் சேர்த்தீர்கள், ஆனால் வெடிகுண்டை சேர்க்க மறந்துவிட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர் பழங்கள் ஆரோக்கியமானது தான், அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் மைதா உணவில் பழங்களை சேர்த்து விற்பனை செய்வது தவறானது. அதிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆரோக்கியம் என்ற பெயரில் இப்படி அந்த கடை வியாபாரி செய்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..