“வாமன ஜெயந்தி” என கூறிவர்களுக்கு..! முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி..!!
தமிழகம் முழுவதும் ஓணம் கொண்டாட்டம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.., கேரளா மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழா தமிழகத்திலும் கோலாகலமாகவும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று முதல் இன்னும் 10 நாட்களுக்கு ஓணம் கேரளா மாநிலம் முழுதும் கொண்டாடப்படும். இதை அறுவடை திருவிழா எனவும் அழைப்பார்கள்.
இன்றைய ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மக்களைப் பிளவுபடுத்தி, குளிர்காய நினைக்கும் சில சுயநல வஞ்சகர்கள் வீழும் ஓணமாக, வருகின்ற ஓணம் அமையும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிட பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ள ஓணத்தை ஒரு தரப்பினர் ‘வாமன ஜெயந்தி’ என கூறி அடையாளத்தை பறிக்க முயல்வது தவறு தென்னாட்டு மக்கள் காட்டிய முற்போக்கு அரசியல் பாதையில் ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் ஆண்டாக, வருகிற ஆண்டு இருக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..