அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு – மத்திய அரசு

நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அந்நிய நேரடி முதலீடாக 652 கோடி டாலர் செய்யப்பட்டுள்ளதாகவும், இது இந்திய மதிப்பீட்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிகளவிலான முதலீட்டை தொலை தொடர்பு, வர்த்தகம், வாகனம் ஆகிய துறைகள் ஈர்த்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கணிணி மென்பொருள், வன்பொருள் துறை, 29 ஆயிரம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

What do you think?

‘செம ஸ்டைலாக காட்டுக்குள் சாகசம் செய்யும் ரஜினிகாந்த்’ வைரலாகும் Promo வீடியோ

‘கேரளாவில் 3 வயது குழந்தைக்கும் கொரோனா’ பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!