கொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை!

Microscopic view of coronavirus.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் தற்காலிகமாக இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் இதுவரை 2,858 பேர் உயிரிழந்துள்ளனர். 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கொரோனோவால் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுற்றுலா விசாவில் வருபவர்களை மறு உத்தரவு வரும் வரை விமான நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

What do you think?

“பொறியியல் கல்வியில் வேதியியல் கட்டாய பாடமாக நீடிக்க வேண்டும்” – வைகோ கோரிக்கை

பாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்!!!