ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதால் அதிலிருந்து தப்பிக்க கடலில் குதித்து பலியானவர்கள் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஒரு பகுதியான ஹவாய் தீவுகள் பசுபிக் கடலின் நடுவில் அமைந்துள்ளது. இந்த தீவில் கடந்த வாரம் காட்டுத் தீ ஏற்பட்டது. பலரும் இந்த தீயிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்தும், தீயில் கருகியும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் நேற்று வரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கக் கூடும் என மீட்புபடையினர் தெரிவித்துள்ளனர். பிரபல சுற்றுலா நகரமான லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.