ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர். இந்நிலையில் இவர் முதல்வராக இருக்கும் போது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அந்த புகார்கள் மீது உண்மை முகாந்திரம் இருப்பதன் பேரில் இன்று காலை 6 மணியளவில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில் இன்று சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்.பி. தனஞ்சயநாயுடு அளித்த நோட்டீஸில், “இந்த நோட்டீஸின் வாயிலாக தாங்கள் கைது செய்யப்படுவது தெரிவிக்கப்படுகிறது. ஜாமீனில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கைது நடவடிக்கை இந்திய அரசியலை சற்று பகீர் கிளப்பி வருகிறது என்றே சொல்லலாம்.