நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் மூத்த சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும். விவாதப்பொருள் பட்டியல் தரவில்லை; அதில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
மேலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை குறித்தும் பேச வேண்டும் என சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.