முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்…!!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவின் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு 8:01 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் கடந்த 2004 முதல் 2014 வரை இந்திய நாட்டின் பிரதமராக இருந்தார். என்பது குறிப்பிட தக்கது..
மற்றும் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அமைச்சராக இருந்தார். நிதித் துறை நிர்வாக அனுபவத்தாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான மன்மோகன் சிங். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..