இரட்டை கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஒசூர் அருகே இரட்டை கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு என்னுமிடத்தில் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி இரவு, காரில் பெண் தொழிலதிபர் நீலிமா, அவரது டிரைவர் முரளி ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்ற மர்ம நபர்கள், கார் மீது பெட்ரோல் குண்டு வீசி அவர்களை கொலை செய்தனர். இது தொடர்பாக மதுரை வழக்கறிஞர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓசூர் தொழிலதிபர் ராமமூர்த்தி தலைமறைவாகிவிட்டார். கொலையில் தொடர்புடைய மஞ்சுநாத், ஆனந்த், ராமு, கோபால் ஆகியோர், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காளிமுத்து நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ராமன், அசோக், ராமகிருஷ்ணன், முருகப்பா ஆகிய நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What do you think?

வருமானவரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்

கெஜ்ரிவால் 16-ஆம் தேதி டெல்லி முதலமைச்சராக பதவியேற்பு