‘முத்தம் கொடுக்காதீர்கள்’ எச்சரிக்கும் பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து!

சீனா:-
கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் கன்னத்தில் முத்தமிடுவதை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசாங்கங்கள் அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பீதியை கிளப்பி வருகிறது.சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய இந்த கொரோனா வைரஸால் அந்நாட்டில் மட்டும் இதுவரை 2,888 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 79,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா மட்டுமில்லாது உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பரவி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.அந்தவகையில் பிரான்சிலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் ஒன்று கூடுதல்,கைகுலுக்குவது,கன்னத்தில் முத்தமிடுவது போன்றவற்றை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

France

இதே போல ஸ்விட்சர்லாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் கன்னத்தில் முத்திடுவதை தவிர்க்குமாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கூறியுள்ளார்.

What do you think?

‘கமலுக்கு சினிமாதான் தெரியும்’ முதலமைச்சர் பழனிச்சாமி அதிரடி!

‘அண்ணாத்த’ தீம் மியூசிக்: இமான் வெளியிட்ட தெறி வீடியோ