“வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி..” இந்த நிறுவனத்தை கண்டால் உஷார் மக்களே..!!
வாணியம்பாடியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினர் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி அலுவலகத்தில் புகுந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நபர்கள் வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் உத்திரகுமார், இவரிடம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எஸ்.பி.ஐஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ) பணியாற்றும், ஜெயந்தி என்பவர், வேலை வாங்கி தருவதாக கூறி உத்திரகுமாரிடம், 3,13,500 ரூபாயை பெற்று ஆயுள் காப்பீடு செய்தால் தான் வேலை கிடைக்கும் என கூறி, பணத்தை ஆயுள் காப்பீட்டில் செலுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து ஜெயந்தி, உத்திரகுமாருக்கு தேர்வு வைத்து, வேலை கிடைத்துவிட்டது எனக்கூறி 5 மாதம் சம்பளமும் வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஜெயந்தி இந்த காப்பீட்டில் ஆட்களை சேர்த்தால், அதிக சம்பளம் கிடைக்கும் என கூறியதை நம்பி உத்திரகுமார், தனது அக்கா மற்றும் அவரது கணவரையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்துள்ளார்.
அவர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கிய பின்னர், கடந்த சில மாதங்களாக உத்திரகுமார் மற்றும் அவரது உறவினர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது, இதனால் சந்தேகம் அடைந்த உத்திரகுமார் மற்றும் அவரது உறவினர்கள் இதுகுறித்து காப்பீடு அலுவலக ஊழியர்களிடம் புகார் அளித்த போது, அவர்கள் எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்தால், ஆத்திரமடைந்த உத்திரகுமார் மற்றும் அவரது உறவினர்கள் இன்று வாணியம்பாடியில் உள்ள தனியார் ஆயுள் காப்பீட்டு அலுவலகத்திற்கு சென்று, அலுவலக ஊழியர்களிடம் பணத்தை திருப்பி அளிக்கும் படி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, அவர்களிடம், புகார் மனு பெற்று இந்நிகழ்வு குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..