வலிநிவாரண மாத்திரை என்ற பெயரில் மோசடி..! போலீஸ் அதிரடி..! 6 பேர் கைது..!
சென்னை கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறி வைத்து வலிநிவாரண மாத்திரை என்ற பெயரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறி வைத்து வலிநிவாரண மாத்திரை என்ற பெயரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது..
தகவலின் பெயரில் கோயம்பேட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர் அப்போது சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி திரிந்த 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பிடிபட்டது.
பின் அவர்களை போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து அவர்கள் பாணியில் விசாரணை மேற்கொண்ட பின்னரே பல உண்மைகள் அம்பலமானது.. அதாவது வேலையில்லாமல் சுற்றி திரியும் இவர்களின் வேலையை வாலிபர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்த அவர்களை போதைக்கு அடிமையாக்குவது தான்..
அப்படி மும்பை சென்று அங்கு போதை மாத்திரைகளை வாங்கி வந்து இங்கு நிவாரண மாத்திரை என்ற பெயரில் விற்பனை செய்து வந்துள்ளனர்.. பின் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அரிஷ்(35), விஜயகுமார் (என்ற) கிழிந்த வாய்(22), அஜய்(22), கோகுல்(21) உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாணிக்கம்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை அரக்கோணம் ரயில் நிலையத்தில் வைத்து கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
அதுமட்டுமின்றி, இவர்கள் செல்போனில் குழு அமைத்து அதில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. தற்போது, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..