இந்தியாவில் தமிழக பகுதிகளில் இருந்து மீண் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யம் நிகழ்வு தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 5ம் தேதி மீன் பிடிக்க சென்ற மீனவர்ளை இலங்கை கடற்படை கைது செய்தது. இதில் சிறுவன் உடபட 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இரு மீன்பிடி படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு இந்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நிரஞ்சனி முரளிதரன் சில நிபந்தனைகளுடன் தமிழக மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். அதைதொடர்ந்து மீனவர்களின் படகுக்கான விசாரணை வரும் 25ஆம் தேதியும் மற்றொரு படகிற்கான விசாரணை 6 மாதங்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி உடல் மற்றும் மன நலன் பாதிக்கப்பட்டு வருகிரது இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.