நட்பு திருமணமா..? – ஜப்பானில் பரவும் புதிய உறவு முறை..!
ஜப்பானில் வேகமாக ட்ரெண்டாகி வரும் Friendship Marriage… இந்த ட்ரெண்ட் இந்தியாவுக்கு வந்துச்சுனா அவ்வளவுதான். அது என்னப்பா Friendship marriageனு தான யோசி்க்கிறிங்க வாங்க எப்படி ஆரம்பிச்சது என்னனு தெளிவாக சொல்றோம்….
Friendship marriage ஆ…புரிலயே…
காதலும், திருமண உறவுகளுமே நாளுக்கு நாள் அதிக சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதுல பெஸ்டியில் தொடங்கி Friends with Benefits வரை பல புதிய உறவு முறைகள் காதலுக்கும், திருமணத்திற்கும் இடையில் வந்துவிட்டன. இந்த பட்டியலில் அடுத்த புது வரவாக வந்திருக்கிறது தான் Friendship Marriage.
ஆமாங்க முதல் முறையாக ஜப்பான்ல வேகமாக இந்த உறவு முறை பரவி வருகிறது. பல இளைஞர்களும் தங்களை இந்த நட்பு திருமணத்தில் இணைத்துகொண்டு வருகின்றனர். இந்த பெயர் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது என்னென்ன பிரச்சனைகளை உருவாக்கப்போகிறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
இது எந்த நாட்டுடைய கலச்சார திருமணமும் இல்லை இருந்தும் ஏன் இதன் மீது ஜப்பான் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களோ…..
நட்பு திருமணமா அப்படினா என்ன..?
பெயரிலேயே குறிப்பிட்டுள்ளது போல நட்பு திருமணம் என்பது ஒரு புதிய வகை உறவாகும். இந்த உறவில் இரண்டு பேர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டு ஒன்றாக குழந்தைகளைப் பெறலாம், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் உடலுறவும் கொள்ள வேண்டாம் அல்லது கணவன்-மனைவியாகவோ இருக்க வேண்டாமென மனப்பூர்வமாக முடிவு செய்வார்கள்.
எனவே அவர்கள் குழந்தைகளை ஒன்றாகப் பெற்றுக்கொள்ள மற்ற மருத்துவ வழிகளைத் தேர்வு செய்கிறார்கள். ஜப்பானில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நட்பு திருமணங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரவுகளின் படி, 2015 ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் சுமார் 500 பேர் நட்புத் திருமணத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல தம்பதிகள் பொதுவாக இதில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்து ஒப்பந்தம் செய்துகொள்வதாகவும் பகிர்ந்துள்ளார்கள்.
இது ஒரு வகையான முன்னேற்பாடாக பார்க்கப்படுவதாகவும் அவர்கள் விருப்பமான உணவுகள், பொதுவான ஆர்வங்கள், செலவுகள், பெற்றோருக்குரிய பொறுப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
ஏனெனில் ஒரு உறவில் காதல் அம்சங்கள் இல்லாமல் வாழ ஒரு இணக்கமான ரூம்மேட் மட்டுமே அவர்களுக்கு வேண்டும். யார் யார் எல்லாம் நட்பு திருமணத்தை விரும்புகிறார்கள்:
இந்த வகையான திருமணத்தை தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான மக்கள் சராசரிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் என்பதையும் அவர்கள் பொதுவாக உடலுறவை வெறுப்பவர்களாகவோ அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களாகவோ இருப்பார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. மேலும், அவர்கள் பொதுவாக ஒரு பாரம்பரிய திருமணத்தை விட நீண்ட கால தோழமையைத் தேடுகிறார்கள்.
மேலும் இந்த திருமணத்தின் கருத்தை விளக்கும் விதமாக திருமண வழக்கறிஞர் ஜாவோ லி இந்த உறவை “நண்பர்களை விட அதிகம், காதலர்களை விட குறைவு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதெல்லாம் கேள்வி பட்ட இந்திய மக்கள் என்னட இது திருமணத்திற்கு வந்த அடுத்த சோதனை என்றும் நட்புனா என்னனு தெரியுமானு கேட்பது போல நட்பு திருமணம்னா என்னனு கேட்குற நிலமை வந்துடுச்சினு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..