90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை இவர் பாடலை விரும்பாத ஆள் இல்லை..!
சாதாரண ஏழ்மை விவசாயா குடும்பத்தில் பிறந்த “சிவசெல்வம்” சென்னைக்கு வந்து கவிஞர் ஆக மாறினார். இவர் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் முன்பு வைரமுத்துவிடம் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றினார்.
அதனை தொடர்ந்து இளந்தேந்திரல் என்ற மாத இதழின் ஆசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். இவர் தமிழ் திரையுலகில் பல்வேறு இயக்குநர்க்குடன் மற்றும் இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார்.
ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார்., இவர் மிகவும் பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்.
சினேகன் என்று கூறினால் ஆ அந்த “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் வந்தாரே அப்படிதானு சொல்லுவாங்க. அந்த அளவிற்கு பேர் கொடுத்தது அந்த நிகழ்ச்சி .
பாண்டவர் பூமியில் “அவரவர் வாழ்க்கையில்” மற்றும் “தோழா தோழா” இந்த இரண்டு பாடல்களும் இவர் எழுதியதே அந்த காலத்து நினைவுகளை கண்முன் தோன்றும்படி செய்தவர் கவிஞர் “சினேகன்”
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உலா போகும்,
நிலவுகள் சேர்ந்து.., பூமியில் வாழ்ந்ததே..,
அது ஒரு பொற்காலம்..
உன் தோளில் சாய்ந்து நம் இருவரை பற்றி பேசி தீர்த்துக் கொள்ளனும் ஒரு ஆணும் பெண்ணும் பேசனினால் அது காதல் தானா அப்படியே ஆனாலும் அந்த நட்பு மாறாது என்ற அருமையான வரிகளை நமக்கு எழுதி கொடுத்துள்ளார்.
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா..
காதலிக்கும் இருவரும் கல்யாணம் எப்படி செய்யலாம் என்றும் உனக்கு சமையல் தெரியுமா என்றும் கேட்கும் வகையில் எழுதப்பட்டதுதான் இந்த பாடல்.
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா, யம்மா
மிளகுல ரசமா மிளகை தொக்கா
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு..
இந்த பாடலையும் இவர்தான் எழுதினாரா 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல் என்றே சொல்லலாம் என்னுள் இதனை மாற்றங்கள் தோன்றுகிறது உனக்கு அதில் எதும் தெரிகிறதா என்று காதலனிடம் கேட்பதுபோல் தெரிகிறதா உங்களுக்கு.
அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா?
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு..
இந்த திரைப்படத்தில் அணைத்து பாடல்களையும் இவர் எழுதினார் காதல் பாடல்முதல் குத்து பாடல்வரை அனைத்தையும் எழுத்திருக்கிறார். கிராமத்து கதைக்களத்தில் பாடல் அதிகமாக எழுதி இருக்கிறார்.
அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்…
அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்…
அய்யய்யோ…
நீ கொன்னாக்கூட குத்தமில்ல…
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…
இன்றும் பல மேடைகளில் கண்கலங்கி நின்று இருக்கிறார். அவர் மட்டுமில்லை இந்த பாடலை கேட்டு அனைவரும் கண்கலங்கி நிற்பார்கள், அம்மா என்று சொன்னாலே அளவிற்கு மிகுந்த அன்பு அவள் இல்லாமல் போனால் எப்படி இந்த பூமியில் நான் இருப்பேன் அனைவரும் மெய்சிலிர்க்க வைத்த வரிகள் என்றே சொல்லலாம்..
பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்
ஆராரிராரோ..
இவருடைய பயணம் காலம் உள்ளவரை பலவிதமான உணர்வுகளில் நமக்கு பாடல்களை எழுதி தருவார் என்று எதிர்பார்க்கிறோம் ,இவர் எழுதிய பாடலில் உங்களுக்கு பித்த பாடல்வரிகள் எது ?
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..