மாடு மேய்ப்பவர் முதல் தொழில் அதிபர் வரை உல்லாசம்..!! கல்யாணராணி சத்யாவிற்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி..!!
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி காவலர்களால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்.. தொடர்ந்து 6௦ நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சத்யாவை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது ஜாமீனில் விடுதலை செய்துள்ளது… விடுதலை செய்ததற்கான காரணம் குறித்து விரிவாக படிக்கலாம்..
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் சத்யா (வயது 35) இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில் பணம் சம்பாதிப்பதற்காகவும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் திருமணம் ஆகாத ஆண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி திருமணம் செய்து கொண்டு பணம் நகைகளை ஏமாற்றி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் சத்யாவிற்கும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பருக்கும் திருமணம் ஆகியுள்ளது. ஒருமுறை சத்யாவின் செல்போனை எடுத்து பார்த்த போது அதில் பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.. அதை பற்றி கணவர் மகேஷ் கேட்டதற்கு அவருடன் சண்டையிட்டு மாமியார் வீட்டில் போட்ட 12 சவரன் நகையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்..
இதுகுறித்து காவல் நிலையத்தில் மகேஷ் அரவிந்த் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர்., அர்விந்த் கொடுத்த ஆதரங்களை வைத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின் சத்யா தனது வழக்கறிஞர் மூலம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி சத்யா மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்..
ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு 6௦ நாட்களுக்கு மேலாகியும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபடாத நிலையில் இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.தனபால், இந்த வழக்கில் காவல்துறை உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதை காரணம் காட்டி சத்யாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
காவல்துறை விசாரணையில், சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவர் முதல் காவல் துறையினர், தொழில் அதிபர் என பலரை திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.