“ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாசன் வரை..” அதை பண்ணிதான் சினிமாவிற்கு வந்தாங்களாம்..!!
அடிக்கடி புருவத்தில் வித்தியாசம் தெரிவதால் என் முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறேன் என நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மையில்லை என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்…
டயானா மரியம் குரியன், சினிமாவுக்காக நயன்தாராவாக மாறி தாய் மொழியான மலையாளத்தில் தான் தனது திரைபயணத்தை தொடங்கினார்.
தமிழில் சரத்குமார் ஜோடியாக ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தின் ஜோடியாகி சந்திரமுகி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது புருவத்தை உயர வைத்தார்.
2018ம் ஆண்டில் போர்ஸ் இதழில் இடம்பிடித்த டாப் 100 லிஸ்டில் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை என்ற பெருமையும் பெற்றார் .
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
திரையுலகினர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக அழகை மாற்றுவது வழக்கமானது தான்.
ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாசன் வரை பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
புருவத்தை அழகுபடுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, கன்னம் மற்றும் மூக்குப் பகுதியில் சர்ஜரி செய்துள்ளதாகவும் உதட்டில் ‘லிப்
பில்லர்’களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இதை நயன்தாரா மறுத்தாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “புருவத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். அதை அழகுபடுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்வேன்.
ஏனென்றால் அதுதான் எனக்கு உண்மையான “கேம் சேஞ்சர்”. அடிக்கடி அதில் வித்தியாசம் தெரிவதால், என் முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறேன் என நினைக்கிறார்கள்…
ஆனால், அது உண்மையில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை. டயட் காரணமாக உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதனால் என் கன்னங்கள் ஒட்டி இருப்பது போலவும், தடித்து இருப்பது போலவும் தெரிகின்றன. அவ்வளவுதான் வேறொன்றுமில்லை” என்று கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..