நிறைவேறிய கே.என்.நேரு சபதம்..! நெகிழ்ச்சியில் துரை வைகோ..!
திருச்சி மக்களவை தொகுதிக்கு எப்போதும், “வந்தாரை ஜெயிக்க வைக்கும் தொகுதி” என்ற பெயர் உண்டு. அதற்கு காரணம், இந்த தொகுதியில் கடந்த சில காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வென்றவர்கள் பலரும் இருக்கிறார்களா. வெவ்வேறு மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டவர்கள் கூட. திருச்சியில் நின்று போட்டியிட்டால் வெற்றி பெறுவார்கள்.
அதேபோல் இந்த முறை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ போட்டியிட்டு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக நிறைவேற்றிய திட்டங்கள் :
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுக்கும், திருச்சி மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்த அவர். மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம், மகளிர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர்க்கு இலவச பேருந்துகள் திட்டம் உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றி தான் இது.
தனி சின்னத்தில் நிற்பதாக உறுதியான பின், அதனையொட்டி துரை வைகோவுக்கும், திமுக தொண்டர்களுக்கும் இடையில் மூத்த அமைச்சர் கே.என்.நேரு மேடையில் இருக்கும் போது “உரசல்” ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு “செத்தாலும் சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவேன்” என்று மேஜையை குத்தி துரை வைகோ கண்ணீர் விட்டார், ஆனால், தி.மு.க தலைமை கண்டித்தபிறகு அமைச்சர் கே.என்.நேரு, என்னனை வெற்றி பெற செய்வேன் என சபதம் ஏற்றார். அவரின் சபதம் தற்போது நிறைவேறியது என சொல்லலாம்.
திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. மேலும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
திருச்சி மக்களவை தொகுதி மக்களாகிய நீங்கள் இந்த எளியவனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து உள்ளீர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தார். அது மட்டுமின்றி இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் உறுதியாக செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் இணைந்து செயலாற்ற நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார். இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..