காதலியுடன் உல்லாசம்..!! குருவை மிஞ்சிய சிஷ்யன்..!! 1.5கோடி மோசடி..!!
புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்தவர் சரவணன் இவர் நகர பகுதியில் எலக்டாரினிக்ஸ் மற்றும் பாத்திர கடை நடத்தி வருகிறார். இவர் ஆன்லைன் வர்தகத்தில் சற்று ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அங்கு வாடிக்கையாளர் போல் வந்த மோசடி மன்னன் சௌந்தர்ராஜன் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய விருப்பமாக இருந்த சரவணன் தொலைபேசி எண்ணை வாங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சரவணன் தொலைபேசி எண்ணிற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் போல் போலி இணைய பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் அவரை தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு செய்ய வைத்துள்ளார்.
அதன்படி சரவணன் ஆன்லைன் வரதகத்திற்க்கு சிறுக சிறுக ரூ. 1 கோடியே 69 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது தனது ஆன்லைன் வர்தக கணக்கில் பணம் இல்லை என்று தெரிந்த உடன் அந்த ஏமாற்று நிறுவனத்திற்கு தொடர்பு கொண்ட போது எதிர் தரப்பில் இருந்து சரியான பதில் வராததால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் வர்தகம் மூலமாக சரவணனிடம் மோசடியில் ஈடுப்பட்டது, புதுச்சேரி ஐயங்குட்டிபாளையம் பகுதியை சேர்ந்த செளந்தரராஜன் என தெரிய வர திருப்பூரில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த போலீசார் புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை செய்ததில், செளந்தரராஜன் போலி ஆன்லைன் நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களிடம் 10 கோடிக்கு மேல் மோசடி செய்து அப்பணத்தில் கடலூரில் உள்ள தனது காதலியுடன் ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்ந்தும், சில சொத்துக்கள் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன் புதுச்சேரியில் 40 கோடிக்கு மேல் ஏமாற்றிய மோசடி மன்னன் சரவணன் என்பவரின் உதவியாளராக இருந்து அவரிடம் ஏமாற்று தொழிலை கற்றுக்கொண்டு தற்பொழுது குருவை மிஞ்சிய சிஷ்யனாக வலம் வந்தார், ஆனால் ஒரு கட்டத்தில் போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்ட சௌந்தரராஜன் அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு தனக்கும் இது எதற்கும் சம்பந்தமில்லை எனக் கூற போலீசார் கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர்.
அதற்குப் பிறகு புதுச்சேரி தமிழகத்தில் குழுவாக செயல்பட்டு பலரை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார் இதனை அடுத்து கைது செய்யப்பட்ட செளந்தரராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் அவரை காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் அவருடன் தொடர்புடைய சிலரை கைது செய்ய உள்ளதாகவும், செளந்தரராஜன் ஏமாற்றிய பணத்தில் வாங்கிய சொத்துக்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் வங்கி பணவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..