3 கோடி வீடுகள் கட்ட நிதி..! ஒன்றிய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!
2024-25-க்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை 7-வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது முழு பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் மகளிர் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு நிதி ஒதுக்கீடு, ஊரக மேம்பாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். MSME நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
என அறிவித்த அவர் பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ₹26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இளைஞர்கள் நலனுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..