ஜி20 மாநாட்டில் பிரதமரின் நாட்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பலகையில், இந்தியாவுக்கு பதிலாக ‘பாரத்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டிருந்தது. இது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தனர். இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்ற தகவல் உலகளவில் பரவியது.
இந்நிலையில் இன்றும் நாளையும் டெல்லியில் பலத்த பாதுக்காப்புடன் ஜி20 உச்சி மாநாடு நடைப்பெற உள்ளது. இந்தியா தலைமையேற்று ஜி20 மாநாடு சற்றே தொடங்கிய நிலையில் இதில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கையில் அமரவே அவருடைய முன்னாள் உள்ள பெயர் பலகையில் இந்தியாவுக்கு பதில் பாரத் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்தியாவின் பெயர் மாற்றம் உறுதி என தெரியப்படுகிறது.