திருமணத்திற்கு உதவிய தொழிலாளி கடப்பாரையால் தாக்கி கொலை..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் காங்கேயத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு காதல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு உதவி செய்ததால் 100-நாள் தொழிலாளியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த பெண்ணின் தந்தையான விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா தம்மரொட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி கவுண்டர் வயது 55. இவரது மனைவி சகுந்தலா வயது 53 ,குமாரசாமி கவுண்டர் 100-நாள் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி நடராஜ் வயது 55 என்பவர் மகள் சரண்யா வயது 22. சரண்யா அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி மகன் தங்கராஜ் வயது 28 என்பவரை காதலித்து வந்தார்.
சரண்யா தங்கராஜ் காதல் திருமணத்தை குமாரசாமி கவுண்டர் முன் நின்று திருமணம் செய்து வைத்தார். அப்போதே நடராஜ் குமாரசாமி கவுண்டரிடம் தகராறு செய்தார். இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 27/4/2014 ஆம் தேதி தம்மரொட்டிபாளையம் ஒரத்தபாளையம் டேம் செல்லும் ரோட்டில் நடராஜ் தோட்டத்துக்கு அருகே 100 -நாள் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது 100 -நாள் வேலைத் தொழிலாளிகளுடன் குமாரசாமி கவுண்டரும் இணைந்து வேலை செய்து கொண்டிருந்தார்.
100- நாள் வேலை தொழிலாளர்கள் இருந்த பகுதிக்கு வந்த நடராஜ் கடப்பாரையால் உன்னால் தான் என் குடும்பம் வீணாக்கிப் போனது எனக் கூறி குமாரசாமிகவுண்டரை கடப்பாரையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த குமாரசாமி கவுண்டர் முதல் சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இறந்த குமாரசாமி கவுண்டரின் மனைவி சகுந்தலா காங்கேயம் போலீசில் புகார் செய்தார்.
காங்கேயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நடராஜை கைது செய்து செய்தனர். இவ்வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்து நடராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் வாய் தகராறு செய்ததற்கு 1000 ரூபாய் அபராதமும் கொலை குற்றத்துக்கு 5000 அபராதம் என மொத்தம் 6000 ரூபாய் அபராதம் விதித்தார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மணிவண்ணன் ஆஜரானார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து காங்கேயம் போலீசார் நடராஜை பாதுகாப்பாக அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.