பகலிரவு டெஸ்ட் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்குலி!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் பகலிரவு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் அதிகம் நடத்தி வருகின்றன. ஆனால், பிசிசிஐ பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தது வந்தது. இதனையடுத்து பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் கேப்டன் கங்குலி, இனி இந்திய அணியும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் என அறிவித்தார்.

முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே பகலிரவு டெஸ்ட் போட்டியையும் கங்குலி நடத்தியிருந்தார். அதன்பிறகு, இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். அதேபோல், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என கங்குலி திட்டவட்டமாக தெரிவித்தார்.

What do you think?

“ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள், விரைவில் நாடு திரும்புவர்” – வைகோ நம்பிக்கை

“சத்துணவுத் திட்டம், மனுதர்ம திட்டம் ஆகின்றது” – வைகோ கண்டனம்