‘போட்டி ரத்து’ முதல்வருடன் மோதுகிறாரா கங்குலி?

தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி ரத்தானது தொடர்பாக கங்குலி மற்றும் மம்தா பானர்ஜி இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடபட்ட நிலையில் 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்தானது.

இதில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. கொல்கத்தாவில் நடைபெறவிருந்த போட்டி ரத்தானது தொடர்பாக அம்மாநில போலீசாருக்கு பிசிசிஐ தரப்பிலிருந்து முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இப்போட்டி ரத்தானது குறித்து பேசிய மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ”கொல்கத்தாவில் போட்டி நடத்த வேண்டாம் என்று நாங்கள் உத்தரவிடவில்லை. நீங்களாக (கங்குலி) முடிவு எடுத்துக் கொண்டால் அது எப்படி நன்றாக இருக்கும். கங்குலியுடனான நட்பு எல்லாம் சரியாகத் தான் இருந்தது. ஆனால் எங்களிடம் ஒருவார்த்தை சொல்லியிருக்க வேண்டும். இங்கு நடத்த திட்டமிட்ட நிலையில் தலைமை செயலரிடமோ, உள்துறை செயலரிடமோ, போலீஸ் கமிஷனர் அல்லது அரசாங்கத்தில் யாரோ ஒருவரிடம் சொல்லியிருக்கலாம்” என்றும் காட்டமாக கூறினார்.

What do you think?

‘கொரோனா முன்னெச்சரிக்கை’ தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

சரவணா ஸ்டோர்ஸுக்கு சீல்