இல்லதரசிகளுக்கான சமையல் டிப்ஸ்..!
* அடுப்பில் கருகிய பாத்திரத்தை இரவில் உப்பு நீரில் ஊறவைத்து மறுநாள் தேய்த்து கழுவினால் சுத்தமாகிவிடும்.
* தயிர் புளித்துப்போய்விட்டால் அத்துடன் 3 டம்ளர் நீர் ஊற்றி ஒரு அரை மணி நேரம் கழித்து அதில் இருக்கும் நீரை கீழே ஊற்றிவிட்டால் தயிர் புளிக்காது.
* வாட்டர் பாட்டல் மூடியை திறக்கமுடியாமல் போனால் அதை ஒரு ஈரத்துணியால் இறுக்கி கழட்டினால் திறந்துவிடும்.
* கூட்டோ, குழம்போ கொதி வந்ததும் அடுப்பின் தீயை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனமாகும்..
* பெருங்காயக்கட்டியை, மிளகாய்த்தூளில் போட்டு வைத்தால் நீண்ட நாள் அதன் மணம் மாறாம இருக்கும்.
* இரண்டு தக்காளியை மிக்ஸியில் அரைத்து, சாம்பார் இறக்கும் சமையத்தில் அதில் சேர்த்தால் சுவை கூடும்.
* ஊறுகாய் போடும்போது நறுக்கிய துண்டுகளை இட்லி தட்டில் வைத்து சிறிது வேகவைத்து பின் ஊறுகாய் போட்டால் நன்றாக அதன் சத்துக்களுடன் சுவையாக இருக்கும்.
* வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி லேசான தீக்காயம் ஏற்ப்பட்ட இடத்தில் போட்டாம் சற்று இதமாக குளிர்ச்சியாக இருக்கும்.
* பூண்டு மற்றும் மஞ்சள் துண்டுகளை, அரிசி மற்றும் பருப்புகள் உள்ள டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சுகள் அண்டாது.
* அலமாரியில் கரப்பான் பூச்சு வராமல் இருக்க வெற்றிலையை வைக்க வேண்டும்.