தோனியின் எதிர்காலம் குறித்து கவாஸ்கர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தோனி விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை பொறுத்தே அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து யோசிக்க முடியும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். தோனியும் ஐபிஎல் போட்டிக்காக ஒரு மாதத்திற்கு முன்பே சென்னைக்கு வந்து ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்றார். தற்போது ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தோனி விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், வர இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் தோனி நிச்சயமாக இடம்பிடிப்பார் என்று நானும் உறுதியாக நம்பினேன்.ஆனால், தற்போது இருக்கும் சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. தோனி இல்லாமல் விளையாட இந்திய அணி பழகிக் கொண்டது. எனவே தோனி முறைப்படி ஓய்வு முடிவை அறிவிப்பார் அல்லது அமைதியாக கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடுவார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். கவாஸ்கரின் இந்த கருத்தால் தோனி ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

‘2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா?’ மூடப்படும் அரசு அலுவலகங்கள்!

‘தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி’ சடலத்தை பார்த்த கணவனும் தற்கொலை!