எதனால் நரம்பு தளர்ச்சி உண்டாகிறது..? பார்க்கலாமா..?
நரம்பு தளர்ச்சி என்பது நரம்புகள் பலமிழந்து உடலுக்கு செல்லும் செய்திகள் பாதிக்கப்படுகிறது. கை மற்றும் கால்களில் உணர்ச்சி இல்லாமை, வலி, பலவீனம், கூச்ச உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். இது சில சமையங்களில் தசை சுருக்கம், நடுக்கம் ஆகிய பிரச்சனைகளை உண்டாக்காலாம்.
நரம்பு தளர்ச்சி ஏற்பட காரணங்கள்:
வைட்டமின் குறைபாடு: நரம்புகளுக்கு வைட்டமின் பி6, பி12 போன்றவை மிகவும் முக்கியமானவை. இதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் நரம்பு தளர்ச்சி உண்டாக்கும்.
நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் உடையவர்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நரம்பு தளர்ச்சியை உண்டுபண்ணும்.
மது அருந்துதல்: அதிக அளவில் மது குடிப்பதால் அது நரம்புகளை பாதித்து நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும்.
தொற்று நோய்: தொற்று நோய்கள் நரம்புகளை பாதித்து நரம்பு தளர்ச்சியை உண்டாக்கலாம்.
காயங்கள்: வாகனங்கள் விபத்து, விளையாட்டு காயங்கள் போன்றவை நரம்புகளை சேதப்படுத்தி நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும்.
கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை: புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை நரம்புகளை சேதமடைய செய்து நரம்புதளர்ச்சி உண்டாக்காலாம்.
ஆட்டோ இம்யூன் நோய்கள்: முடக்கு வாதம் மற்றும் ஆட்டோ இம்யூன் நோய்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நரம்புதளர்ச்சி ஏற்படும்.
மரபணு காரணம்: மரபணு நோய்கள் நரம்பு தளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது.
நரம்புகள் எதனால் தளர்கிறது என கண்டறிந்து அதனை குறிப்பிட்டு சரிசெய்ய வேண்டும். தகுந்த மருத்துவரை கண்டு ஆலோசனை பெற வேண்டும்.